ஸ்ரீ லங்கா ஸ்போட்ஸ் குரூப் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ‘லங்கா கால்பந்து கிண்ண’ தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) நடைபெறவுள்ளன.
கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் கண்டி மற்றும் யாழ்ப்பாண அணிகள் மோதவுள்ளன. யாழ்ப்பாண அணி ஆரம்ப போட்டியில் களுத்துறை அணியை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியே அரையிறுதிக்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டி காலி மற்றும் கொழும்பு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் மே 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றதோடு சம்பியன் அணிக்கு ஒரு மில்லியன் ரூபா மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 5 இலட்சம் ரூபா பரிசு வழங்கப்படவுள்ளது.