வல்வெட்டித்துறை ஶ்ரீ முருகன் குடியேற்றம் பகுதியில் யுவதி ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்த சம்பவம் நேற்று (09) இரவு இடம் பெற்றுள்ளது .
இச்சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அன்ரன் மரியதாஸ் கிருபாகினி என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காதல் உறவில் ஏற்பட்ட முறிவினால் உண்டான மனஅழுத்தம் காரணமாக திடீரென விபரீத முடிவு எடுத்து தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் கிராமத்தில் வசித்து வந்த இவர், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் சில காலமாக உறவுமுறையில் இருந்துள்ளார்.
அந்த வாலிபர் திடீரென மனம் மாறி வேறு ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கியதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த பெண், இரவில் தனது வீட்டில் தனது உடலில் தீ வைத்து கொண்டார்.
குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, அவர் வீட்டிற்குள் இறந்து கிடப்பதைக் கண்டு, கிராம அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்
தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333