Home » மகாவலி அபிவிருத்தியின் பெயரால் தமிழர் நிலங்களை அபகரிக்காதே

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் தமிழர் நிலங்களை அபகரிக்காதே

- வட மாகாண ஆளுநர் செயலகம் முன் போராட்டம்

by Prashahini
May 8, 2024 3:03 pm 0 comment

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய் மற்றும் கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று (08) காலை 10.00 மணியளவில், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே, மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா, எமக்கு நீதி வேண்டும், மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து என்ற பதாகைகள் தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் வடக்குமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் முடிவில் மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

யாழ்.விசேட நிருபர்
யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x