ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) 5ஆவது முறையாக மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாகியுள்ளார்.
ரஷ்யாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அந்நாட்டு அதிபராக புதின் நேற்று (07) பதவியேற்றுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று 5ஆவது முறையாக புதின் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாகியுள்ளார்.
இதன் மூலம் அதிக முறை ரஷ்ய ஜனாதிபதியாக இருந்தவர் என்ற சாதனையையும் புதின் படைத்துள்ளார்.
1999ஆம் ஆண்டில் பதில் அதிபராக பதவியேற்ற புதின், 2007ஆம் ஆண்டில் ரஷ்ய ஜனாதிபதியாக முதல் முறையாக பெறுப்பேற்றார்.
மீண்டும் 2012இல் அதிபராக பொறுப்பேற்ற புதின் அதன் பின்னர் தற்போது வரை அவரே ரஷ்ய ஜனாதிபதியாக தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.