522
அரச காட்டுக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி – இராமநாதபுரம் பிரிவிற்குட்பட்ட கல்மடு காட்டுப்பகுதிக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்து மரங்களை வெட்டி இரண்டு உழவியந்திரங்களில் ஏற்ற முற்பட்ட ஐந்து இளைஞர்கள் இராமநாதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் வெட்டிய மரங்கள் அனைத்தும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.