403
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைகள் இன்று (06) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின.
இந்த பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுவதாக இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைகள் ஆரம்பமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்