Thursday, December 12, 2024
Home » IPL 2024: அதிக ஓட்டங்களுடன் ORANGE CAP ருதுராஜ் வசம்

IPL 2024: அதிக ஓட்டங்களுடன் ORANGE CAP ருதுராஜ் வசம்

- அதிக விக்கெட்டுக்களுடன் PURPLE CAP ஜஸ்பிரித் பும்ரா வசம்

by Prashahini
May 2, 2024 9:40 am 0 comment

– புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட பஞ்சாப்

IPL 2024இன் 49ஆவது போட்டியில் நேற்று (01) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, சென்னை அணியை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. சென்னைக்கு எதிரான போட்டிக்கு முன் 8வது இடத்தில் இருந்த பஞ்சாப் அணி, தற்போது 7ஆவது இடத்திற்கு வந்துள்ளது. மறுபுறம் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகள் மற்றும் +0.627 என்ற ரன் ரேட்டுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது.

முதல் 4 அணிகள்:
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

மற்ற அணிகளின் நிலைமை..?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் முறையே தலா 10 புள்ளிகளுடன் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. அதன் கீழ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் தலா 8 புள்ளிகளுடன் முறையே ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் உள்ளன. இதன்பின், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளன.

ORANGE CAP – அதிக ஓட்டங்கள்:
1. ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 509 ஓட்டங்கள், சராசரி: 63.62, ஸ்ட்ரைக் ரேட்: 146.69, 4s: 53, 6s: 15
2. விராட் கோஹ்லி (RCB): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 500 ஓட்டங்கள், சராசரி : 71.43, ஸ்ட்ரைக் ரேட்: 147.49, 4s: 46, 6s: 20
3. சாய் சுதர்சன் (GT): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 418 ஓட்டங்கள், சராசரி: 46.44, ஸ்ட்ரைக் ரேட்: 135.71, 4s: 43,
4. கே.எல்.ராகுல் (LSG): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 406 ஓட்டங்கள், சராசரி: 40.60, ஸ்ட்ரைக் ரேட்: 142.96, 4s: 37, 6s: 15
5. ரிஷப் பந்த் (DC): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 398 ஓட்டங்கள், 4 சராசரி 22:4 : 158.57, 4s: 31, 6s: 24

PURPLE CAP – அதிக விக்கெட்கள்:
1. ஜஸ்பிரித் பும்ரா (MI): 10 போட்டிகள், 40.0 ஓவர்கள், 240 பந்துகள், 14 விக்கெட்டுகள், சராசரி: 18.29, ஓட்டங்கள்: 256, 5-ஃபெர்ஸ்: 1.
2. முஸ்தாபிசுர் ரஹ்மான் (CSK): 9 போட்டிகள், 324.2 பந்துகள், , 14 விக்கெட்டுகள், சராசரி: 22.71, ஓட்டங்கள்: 318, 4-ஃபெர்ஸ்: 1.
3. ஹர்ஷல் படேல் (PBKS): 10 போட்டிகள், 33.0 ஓவர்கள், 198 பந்துகள், 14 விக்கெட்கள், சராசரி: 24.14,
4. மத்தீஷ பத்திரண (CSK): 6 போட்டிகள், 22.0 ஓவர்கள், 132 பந்துகள், 13 விக்கெட்டுகள், சராசரி: 13.00, ஓட்டங்கள்: 169, 4-ஃபெர்ஸ்: 1.
5. T. நடராஜன் (SRH): 7 போட்டிகள், 28.0 ஓவர்கள், 168 பந்துகள், 13 விக்கெட்டுகள், ஏவிஜி : 19.38, ஓட்டங்கள்: 252, 4-ஃபெர்ஸ்: 1.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT