Thursday, July 18, 2024
Home » அக்கரைப்பற்றில் இலவச அரிசி விநியோகம்

அக்கரைப்பற்றில் இலவச அரிசி விநியோகம்

by Gayan Abeykoon
May 1, 2024 7:24 am 0 comment

அக்கரைப்பற்று பிரதேசத்தில்  குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு  இலவசமாக அரிசி விநியோகம் செய்யப்பட்டதுடன்,  மேற்படி குடும்பங்களுக்கான அரிசியை  பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா   வழங்கி வைத்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால்  வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி விநியோகத் திட்டத்தின் கீழேயே அக்கரைப்பற்றிலும் இந்நடவடிக்கை அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து அரிசி வழங்கப்பட்டது.  இந்நடவடிக்கையின் போது அம்பாறை  மாவட்ட அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோர் பங்குபற்றி தமது சேவைகளை வழங்கினர்.

அக்கரைப்பற்று மத்திய நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT