Sunday, June 23, 2024
Home » ஆறு ஆண்டுகள் போட்டியிட தடை:

ஆறு ஆண்டுகள் போட்டியிட தடை:

பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

by sachintha
April 30, 2024 10:50 am 0 comment

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் தேர்தல்களில் 6 ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்கக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மதம், கடவுளின் பெயரால் மோடி வாக்கு சேகரிப்பதால் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என கோரி பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோந்தலே ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஏப்ரல் 15-ஆம் திகதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இப்பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கறிஞர் ஆனந்த் ஜோந்தலே தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளன.

ஆனால் பிரதமர் மோடி இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலி​ெகாப்டர்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இந்து தெய்வங்கள்- இந்து வழிபாட்டு தலங்கள்- சீக்கிய வழிபாட்டுத் தலங்களைக் குறிப்பிட்டு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

பிரதமர் மோடி மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது.

ஆகையால் பிரதமர் மோடி அடுத்த 6 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு ஆனந்த் ஜோந்தலே தமது மனுவில் கோரியிருந்தார்.

இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சச்சின் தத்தா, இப்படித்தான் செயல்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது; ஆகையால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT