Thursday, July 25, 2024
Home » இலகு வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி

இலகு வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி

by damith
April 29, 2024 12:41 pm 0 comment

மகளிர் டி20 தகுதிகாண் தொடரில் ஸ்கொட்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் 10 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி ஏ குழுவின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

அபூதாபியில் நேற்று முன்தினம் (27) நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணியை 18.1 ஓவர்களில் 94 ஓட்டங்களுக்கு சுருட்ட இலங்கை அணியால் முடிந்தது. இதன்போது மூன்று வீராங்கனைகளே இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றதோடு மத்திய பின் வரிசையில் லோர்னா ஜக் அதிகபட்சமாக 24 ஓட்டங்களை பெற்றார்.

அபாரமாக பந்து வீசிய சுழற்பந்து வீராங்கனை கவிஷா டில்ஹாரி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இனோஷி பிரியதர்ஷினி 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் பதிலெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 10.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கான 95 ஓட்டங்களை எட்டியது. அணித்தலைவி சமரி அத்தபத்து 35 பந்துகளில் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை பெற்றதோடு மறுபுறத்தில் விஷ்மி குணரத்ன ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களை சேர்த்தார்.

ஏற்கனவே தனது முதல் போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்திய இலங்கை மகளிர், அடுத்து வரும் புதன்கிழமை (மே 1) உகண்டா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT