Saturday, July 13, 2024
Home » வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை; மேலுமொரு சந்தேகநபர் கைது

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை; மேலுமொரு சந்தேகநபர் கைது

- இதுவரையில் தொடர்புடைய 09 பேருக்கு விளக்கமறியல்

by Prashahini
April 26, 2024 11:17 am 0 comment

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்று , கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதுடன் , மனைவியை வீதியில் இறக்கி விட்டு சென்று இருந்தனர்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இதுவரையில் 09 பேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்றால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார்.

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். வட்டுக்கோட்டை கொலை; தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி

யாழில் இளம் குடும்பஸ்தர் கொலை; கிளிநொச்சியில் நால்வர் கைது

மனைவியுடன் கடத்தல்; வாள்வெட்டு தாக்குதலில் யாழ். இளைஞன் உயிரிழப்பு

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT