Wednesday, October 9, 2024
Home » குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலிய சியோனிசவாதிகள் செயற்பாடுகளை ஏற்க முடியாது

குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலிய சியோனிசவாதிகள் செயற்பாடுகளை ஏற்க முடியாது

- பலஸ்தீனத்திற்காக இமாம் கொமெய்னி எழுப்பிய குரலையே நாமும் பின்பற்றுகிறோம்

by Rizwan Segu Mohideen
April 25, 2024 5:19 pm 0 comment

– கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலில் ஈரான் ஜனாதிபதி தெரிவிப்பு

குழந்தைகளையும் வயதானவர்களையும் கொலை செய்யும் இந்த உலக நாடுகளில் மிகவும் ஒர் கொடியவர்களாக இஸ்ரவேலர்களான சியோனிச வாதிகள் செயல்படுகின்றார்கள்.

இவர்களது செயற்பாடுகளை உலகில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்தார்.

குழந்தைகள் வயதானவர்களை கொலை செய்து வருகின்றனர். இதற்காக அமெரிக்கா துணை நிற்கிறது. இஸ்லாம் உலக நாடுகளில் வளர்ச்சி அடைவதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (24) மாலை கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்கு ஆற்றிய உரையிலேயே அவர் அதனைத் தெரிவித்திருந்தார்.

மஹ்ரிப் தொழுகைக்காக கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு வருகை தந்த அவர், பள்ளிவாசலில் மக்களோடு மக்களாக இணைந்து சகலருக்கும் கைகொடுத்து சலாம் சொல்லிக் கொண்டார்.

அத்துடன் இமாமாக நின்று மஹ்ரிப் தொழுகையை நிறைவேற்றிய அவரின் பின்னால் நின்று அவருடன் வருகை தந்த ஈரான் துாதுவர், அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஈரான் ஜனாதிபதி, ஈரான் புரட்சித் தலைவர் காலம் சென்ற இமாம் கொமெய்னி 45 வருடங்களுக்கு முன்பே பலஸ்தீன் நாடு விடுவிக்கப்பட வேண்டும் என, அவர் பலஸ்தீன் பூமிக்கும் அந்த மக்களுக்காக குரல் கொடுத்திருந்தார்.

அதையே இன்று நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த உலகில் நவீன விஞ்ஞான தொழில்நுட்பம், பொறியியல், நீர் மின்சாரம் போன்ற துறைகளில் உலகின் மேலோங்கி நிற்கும் நாடாக, ஈரானாகிய நாம் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.

உலகில் 20 நாடுகளுக்கு மேல் நீர் மின்சாரம், பொறியியல் மற்றும் விஞ்ஞானத்துறைகளில் எமது திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஓர் அங்கமாகவே உங்களது நாட்டில் நட்புறவாக இத்திட்டத்தினை அங்குராப்பணம் செய்த திட்டமாகும்.அத்துடன் எமது விஞ்ஞான வளர்ச்சிகளை பகிர்ந்து கொண்டுள்ளோம்.

இந்த உலகில் உள்ள முஸ்லிம் நாடுகள் சுதந்திரமாகவும் அவரவர்களது இறையாண்மைக்கு பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்நாடுகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எத்தனிக்கின்றன. அதற்காக சில யுக்திகளை கையாண்டு யுத்தங்களையும் நாடுகளுக்கிடையே பிணக்குகளும் ஏற்படுத்துகின்றனர்.

பலஸ்தீன் நாட்டுக்கு அந்த மக்களுக்கு நடைபெறும் அநியாயங்கள் அழிவுகளுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதோடு, அதற்காக உதவியும் வருகிறது.

ஈரானின் அபிவிருத்திகளையும் ஏனைய நாடுகளுடன் நாம் நட்பாக இருப்பது நமது எதிரிகள் வேறு கோணத்தில் அவதானிக்கினறனர்.

8 வருடங்களாக ஈரான்- ஈராக் யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்த்தினால் பலர் அழிந்தார்கள் அந்த யுத்தின் மூலம் அவர்கள் வெற்றியடையவில்லை என்றார்.

இங்கு உரையாற்றிய வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி, ஈரான் இலங்கைக்கு உதவியதை நினைவுகூந்ததோடு, 3 மாதங்களுக்கு முன்பே தானும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் , ஈரான் ஜனாதிபதியை இலங்கைக்கு வந்து உமா ஓயா திட்டத்தினை திறந்து வைப்பதற்காக அழைப்பு விடுத்தாக குறிப்பிட்டார். பலஸ்தீனுக்கு ஆதரவாகவே இலங்கை செயற்பட்டு வருகின்றமையும் அலி சப்ரி இங்கு நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூரி வரவேற்புரை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(அஷ்ரப் ஏ சமத்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x