370
அம்பாறை மாவட்ட எல்லே சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பாலமுனை ட்ரை ஸ்டார் அணி அம்பாறை மாவட்ட சம்பியனாகி கிழக்கு மாகாண போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
அம்பாறை நகர பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (22) நடை பெற்ற இறுதி போட்டியில் மஹாஓயா பிரதேச செயலக அணியினர் 1 ஓட்டம் பெற அட்டாளைச்சேனை பிரதேச செயலக ட்ரைஸ்டார் அணியினர் 6 பந்துகளில் இரண்டு ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் ரைட் ஸ்டார் சார்பாக எம்.ரீ. முஜாபிர் இரண்டு ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு உதவினார்.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்