178
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் நடைபெறவுள்ள விவாதத்துக்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு தேசிய மக்கள் சக்தி கடிதம் அனுப்பியுள்ளதுடன், எதிர்வரும் மே மாதம் 07ஆம், 09ஆம், 13ஆம், 14ஆம் திகதிகளில் விவாதம் நடத்த தயாராகவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்தது.