Thursday, June 20, 2024
Home » அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

by Gayan Abeykoon
April 24, 2024 3:51 am 0 comment

அக்கரைப்பற்று மரைக்கார் வீதியைச் சேர்ந்த உமறுலெவ்வை சுஹைப் அகில இலங்கை சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் ஆரம்பக் கல்வியை அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் கற்றார். பாடசாலைக் காலத்தில் மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்கினார்.

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் தட்டெழுத்துப் பயிற்சி நெறியினை முறையாகப் பயின்று பின்னர் வடக்கு கிழக்கு மாகாண தட்டெழுத்தாளருக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் முதன்மை நிலையில் தெரிவாகி தமிழ் தட்டெழுத்தாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலமுனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT