Home » பகவான் இராமகிருஷ்ணர் திருக்கோவில் ஸம்ப்ரோக்‌ஷண விழா!

பகவான் இராமகிருஷ்ணர் திருக்கோவில் ஸம்ப்ரோக்‌ஷண விழா!

by Gayan Abeykoon
April 24, 2024 9:36 am 0 comment

இராமகிருஷ்ண மிஷனின் காரைதீவு சாரதா நலன்புரி நிலையத்தில் புனரமைக்கப்பட்ட பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருக்கோவில் ஸம்ப்ரோக்ஷண விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட மிஷன் அபிமானிகள், பிரமுகர்கள், அறநெறி மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வேத மந்திரங்கள், மங்களாரத்தி, திருப்பள்ளியெழுச்சி,கோயில் வலம், கொடியேற்றம், பூஜை, பஜனை, ஹோமம், சிறப்பு ஆரதி, சொற்பொழிவு என்பன அதிகாலை முதல் அங்கு நடைபெற்றன.

காரைதீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT