இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கையின் QR இன் கீழ் Alipay QR குறியீட்டு கொடுப்பனவுகளை செயல்படுத்தும் இலங்கையின் முதல் வங்கியாக வர்த்தக செயற்பாடுகளுக்கான புதிய வாய்ப்புகளுக்கு வித்திட்டுள்ளது.
தற்போது 1 பில்லியனுக்கும் அதிகமான Alipay e-wallet வைத்திருப்பவர்கள், இந்த சமீபத்திய வளர்ச்சியின் விளைவாக, உலகில் எங்கிருந்த போதிலும் பணம் செலுத்துவதற்காக இலங்கை வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட கொமர்ஷல் வங்கி லங்காபே (LankaPay) ஒருங்கிணைந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியும்.
பரந்தளவிலான புதிய வாடிக்கையாளர் பிரிவை அணுகுவதற்கு வசதியாக, வங்கி தனது வலையமைப்பு முழுவதும் புதிய QR-இன் வரிசைப்படுத்தலை நிறைவு செய்யும் போது,வங்கியின் 50இ000க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் Alipay QR-ஐ ஏற்றுக்கொள்ள முடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
POS சாதனங்களைக் கொண்ட சுமார் 28இ000 வர்த்தகர்கள் வங்கிக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் சேவையை செயற்படுத்திய பின்னர் POS சாதனங்கள் வழியாக Alipay QR கட்டணங்களை ஏற்றுக்கொள்ள முடியும்.
முன்னணி டிஜிட்டல் கொடுப்பனவு மற்றும் வாழ்க்கைமுறை சேவை தளமாக, Alipay ஆனது 1 பில்லியனுக்கும் அதிகமான சீன நுகர்வோருக்கு சிரமமின்றி சேவை செய்வதற்காக பங்குதாரர்கள் மற்றும் சீனாவில் உள்ள 80 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு உதவுகிறது.