நடப்பு IPL தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அந்த அணியின் வெற்றியை இரசிகர் ஒருவர் கொண்டாடும் காணொளி வைரலாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது.
சேப்பாக்கம் மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளித்தது. மைதானத்தில் ஒரு சில நீல நிற ஜெர்சிகள் மட்டுமே காணப்பட்டன.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களை குவித்திருந்தது.
எனினும், இந்த இலக்கை லக்னோ அணி சுலபமாக அடைந்து அபார வெற்றியை பதிவுசெய்திருந்தது.
இதன்போது சென்னை அணியின் இரசிகர்கள் மத்தியில் தனி ஒருவராக இருந்த லக்னோ இரசிகர் அணியின் வெற்றியை துள்ளிக் குதித்துக் கொண்டாடினார்.
இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்த காணொளியை X வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜொன்டி ரோட்ஸ், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.