Tuesday, May 28, 2024
Home » மலேசிய ஹெலிகொப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ; 10 பேர் உயிரிழப்பு

மலேசிய ஹெலிகொப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ; 10 பேர் உயிரிழப்பு

by Prashahini
April 23, 2024 1:40 pm 0 comment

மலேசியாவின் கடற்படை அணிவகுப்பிற்கான ஒத்திகையின் போது, நடுவானில் 2 ஹெலிகொப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு ஹெலிகொப்டரின் இறக்கை, அருகில் பறந்துகொண்டிருந்த மற்றைய ஹெலிகொப்டருடன் மோதியதை அடுத்து அவையிரண்டும் தரையில் வீழ்ந்து நொறுங்கியுள்ளன.

மலேசியாவின் Lumut நகரில் அந்நாட்டு நேரப்படி இன்று(23) காலை 9.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகளுக்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.

HOM M503-3 மற்றும் Fennec M502-6 ஆகிய இரு ஹெலிகொப்டர்களே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT