Home » பெருந்தோட்டத்துறை மறுசீரமைப்பிற்கான அணுகுமுறைகள் பற்றி அவதானம்

பெருந்தோட்டத்துறை மறுசீரமைப்பிற்கான அணுகுமுறைகள் பற்றி அவதானம்

by Prashahini
April 22, 2024 4:16 pm 0 comment

நோபல் பிரிசு வென்ற அமெரிக்க பொருளியலாளரான பேராசிரியர் மற்றும் அவரின் குழுவினருடனான கலந்துரையாடல் அறிவுப்பூர்வமானதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

வாஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைக்கால கூட்டத்தொடரின்போதே இச்சந்திப்பு நடைபெற்றது.

இது தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார வளர்ச்சி விவகாரத்தில் பேராசிரியரின் அளப்பரிய பணிக்காகவே 2019 இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வறுமையின் கோரப்பிடியில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் மீள்வதற்காக பேராசிரியர் ஆற்றிய மகத்தான பணிகள் பற்றி அறிந்துகொண்டேன். அதற்கான அணுகுமுறைகள் பற்றியும் அவர் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் வாழும் ஒரு மில்லியன் மக்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தல், பெருந்தோட்டத் துறை மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களை செய்வதற்கான அணுகுமுறைகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT