Friday, June 14, 2024
Home » அமெரிக்க வான் பல்கலையினால் இலங்கை விமானப்படை தளபதிக்கு கௌரவம்

அமெரிக்க வான் பல்கலையினால் இலங்கை விமானப்படை தளபதிக்கு கௌரவம்

by Rizwan Segu Mohideen
April 22, 2024 1:56 pm 0 comment

அமெரிக்காவின் அலபாமா மேக்ஸ்வெல் விமானப்படை தளத்தில் அமைந்துள்ள வான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மரியாதை பட்டியல் (International Honour Roll) அறிமுக விழா கடந்த 2024 ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற 21 முன்னாள் சர்வதேச மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதற்கமைய, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவும் இந்த கௌரவ பட்டியலில் இதன்போது இணைந்து கொள்கின்றார் என்பது குறிப்பிட்டதக்கது.

சர்வதேச வான் பல்கலைக்கழகத்தினால் சர்வதேச மரியாதை பட்டியல் (International Honour Roll) கௌரவமளிப்பு அந்த பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை கற்ற இராணுவ மற்றும் முதன்மை சிவில் பிரிவில் கடமையாற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட கட்டளை அல்லாத அதிகாரிகளுக்கு வழங்கி கௌரவிக்கப்படும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT