413
யுக்திய நடவடிக்கையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அடுத்த மாதத்திற்குள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் அதற்கான விசேட இடம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.