Tuesday, May 28, 2024
Home » UPDATE: தியத்தலாவை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்வு

UPDATE: தியத்தலாவை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்வு

- காயமடைந்த 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

by Prashahini
April 21, 2024 4:54 pm 0 comment

இன்று (21) தியத்தலாவையில் இடம்பெற்ற ‘Fox Hill Super Cross 2024’ கார் பந்தய விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

பந்தயத்தில் பங்குபற்றிய கார் ஒன்று ஓட்டப் பாதையை விட்டு விலகி கடுப்பாட்டை இழந்து பார்வையாளர் பகுதிக்குள் சென்றதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விபத்தில் மரணித்தவர்களில் போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் 4 பேர் மற்றும் சிறுமி ஒருவர் உள்ளிட்ட 7 பேர் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து போட்டியின் மீதமுள்ள போட்டிகள் இரத்து செய்யப்படுள்ளன.


தியத்தலாவை கார் பந்தய நிகழ்வில் விபத்து; 5 பேர் பலி

தியத்தலாவையில் இன்று (21) இடம்பெற்ற ‘Fox Hill Super Cross 2024’ கார் பந்தய நிகழ்வின் போது இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

Sri Lanka Automobile Sports (SLAS) ஆதரவுடன், Sri Lanka Military Academy Diyatalawa ஏற்பாடு செய்துள்ள ‘Fox Hill SuperCross’ இன் 28வது பதிப்பு இன்று தியத்தலாவவில் ஆரம்பமானது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT