உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று ஐந்தாவது வருட நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று (21) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் இடம்பெற்றன.
பிரதான அஞ்சலி நிகழ்ச்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் தலைமையில் அவரது கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கொல்லப்பட்ட உறவினர்களுடைய புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி கொழுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுடைய கிறிஸ்தவ விவகார பிரிவு ஏற்பாடு செய்த இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கட்சியின் செயலாளர் பி பிரசாந்தன் உட்பட உயிர் நீத்த உறவுகளுடைய உறவினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு குறூப் நிருபர்