Tuesday, May 28, 2024
Home » நாட்டின் பல பகுதிகளில் நாளை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் நாளை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

- சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

by Prashahini
April 21, 2024 11:10 pm 0 comment

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (22) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், நிழலான இடங்களில் இயன்றவரை ஓய்வெடுத்தல், வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT