329
வவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு 10 கிலோவீதம் இலவச அரிசிப்பொதி விநியோகிக்கும் நிகழ்வு இன்று (21) அட்மஸ்கட பாடசாலையில் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்திற்குட்பட்ட நான்கு கிராமசேவகர் பிரிவில் உள்ள 650 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன், மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் காஞ்சனா, அட்மஸ்கட விகாராதிபதி மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா விசேட நிருபர்