புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ கட்டுபத மஹாவெவயில் குடும்பத்துடன் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி நேற்று (20) உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆராச்சிக்கட்டுவ, நல்லதரன்கட்டுவ, இலக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய தினேத் சத்சர என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.
தாயின் சகோதரியும், அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் மற்றுமொரு அயலவர் ஆகியோருடன் நீராடுவதற்காக சென்ற போதே குறித்த மாணவன் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்