இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் மதர் ஸ்ரீலங்காவும் இணைந்து சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் அபிவிருத்திக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன.
மதர் ஸ்ரீலங்கா திட்டத்தின் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி கைத்தொழில் அபிவிருத்திக்காக இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபைக்கு பூரண ஆதரவு வழங்குவதற்கான இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் பத்தரமுல்லையிலுள்ள ‘அபே கம’ கிராம வளாகத்தில் கைச்சாத்தானது.
இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபைத் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும, மதர் ஸ்ரீலங்கா திட்டத் தலைவர் ஜானகி குருப்பு ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கமைய மதர் ஸ்ரீலங்கா திட்டத்தின் சிறிய, நடுத்தர தொழில் முனைவோருக்கு தேவையான அறிவு, பயிற்சி, அரசாங்கத்தின் ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், சிலோன் பிளாசா வணிகத்தளமூடாக பொருட்களை விற்பனை செய்ய, ஊக்குவிக்க, விளம்பரப்படுத்த, சந்தையை கண்டறிய ஒத்துழைப்பும் உதவியும் வழங்கப்படுகிறது.