குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி நேற்று (19) வாக்குமூலம் அளித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களம் அவருக்கு விடுத்த அழைப்புக்கமைய அவர் நேற்று அங்கு சென்றிருந்தார்.
வீடொன்றில் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு இறைச்சிக்காக அறுக்கப்பட்டதும் உயிருடனும் 17 ஆமைகளை மீட்டதுடன், இருவரை கைது செய்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள், மட்டக்களப்புக்கு சென்று அங்கு ஆமைகளை சட்டவிரோதமாக பிடித்து இறைச்சிக்கு 10 ஆமைகளை அறுத்ததுடன், 07 ஆமைகளை உயிருடன் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் காத்தான்குடி பொலிஸார், இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.