முகத்தை மறைத்தவாறு கையுறைகளை அணிந்து ‘நிஞ்ஜா’ வீரர் போன்று வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து திருடும் கும்பலைச் சேரந்த மூவரை கஹதுடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 13 மற்றும் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று தெரிவித்த பொலிஸார், கஹதுடுவ பகுதியைச் சேர்ந்த இவர்களுள் பாடசாலை மாணவர்களும் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
மடிகணினிகள், பித்தளைப் பொருட்கள், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்டவை திருடப்பட்டு, சம வயதுடைய சிறுவர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கும்பல் நீண்டகாலமாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. திருடப்பட்ட பொருட்களை வாங்கியோர், பொலிஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.