மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி தரிசனம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் இன்று(19) காலை சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்டு இறைச்சிக்காக அறுவை செய்யப்பட்ட நிலையிலும் உயிருடனும் 17 ஆமைகளை காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளதுடன் இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்க தெரிவித்தார்.
திருகோணமலையைச் சேர்ந்த 2 நபர்கள் மட்டக்களப்புக்கு வந்து மட்டக்களப்பு பிரதேசத்தில் குறித்த ஆமைகளை சட்டவிரோதமான முறையில் பிடித்து இறைச்சிக்காக 10 ஆமைகளை அறுத்த நிலையிலும் ஏழு ஆமைகளை உயிருடனும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆமை இறைச்சியையும் ,ஆமைகளையும் சந்தேகநபர்களையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸ் மேலும் தெரிவித்தனர்.
ஜவ்பர்கான் மட்டக்களப்பு குறூப் நிருபர்