Sunday, June 16, 2024
Home » சுற்றுச்சூழல் மாசு: குற்றங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

சுற்றுச்சூழல் மாசு: குற்றங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

by Gayan Abeykoon
April 19, 2024 10:25 am 0 comment

சுற்றுச்சூழல் மாசு தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்காக 1997 மற்றும் 1981 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. சுற்றாடல் அழிவு தொடர்பான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே  இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.இதற்கு வசதியாகவே இத்தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மேற்படி தொலைபேசி  இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக அறிவிக்குமாறும் அவர் பொது மக்களைக் கேட்டுள்ளார்.  சுற்றாடல் பாதிப்பு தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் விசேட பணியகத்தின் 1997 என்று அவசர இலக்கமும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் 1981 என்ற அவசர இலக்கமும்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT