Monday, November 4, 2024
Home » பெண்களை கண்டால் பயம்; விநோத நோயால் பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர்

பெண்களை கண்டால் பயம்; விநோத நோயால் பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர்

- 55 வருடங்களாக ஒழிந்து வாழும் நிலை

by Prashahini
April 18, 2024 3:19 pm 0 comment

நம்மில் பலர் ஒவ்வொரு விதமான விஷயங்களைக் கண்டு பயப்படுவோம். சிலருக்கு விலங்குகளை பார்த்தால் பயமாக இருக்கும். சிலருக்கு தண்ணீர் என்றாலே ஆகாது. சிலரால் இருட்டான அறையில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. இதுபோன்ற பயங்கள் மனதில் ஏற்பட்டு அதனை விட்டு நம்மை விலக வைக்கிறது. அந்த வகையில், 71 வயது முதியவர் ஒருவருக்கு பெண்களைப் பார்த்தாலே பயம் வருமாம். இந்த காரணத்திற்காகவே கடந்த 55 வருடங்களாக இவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி வந்துள்ளார்.

ருவாண்டாவை சேர்ந்த கேலிட்ஸி நிசாம்வித்தா ( Callitxe Nzamwita ) என்பவர் 16 வயதில் இருந்தே பெண்களை தவிர்ப்பதற்காகவே தன்னை ஒரு அறைக்குள் பூட்டி கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளார். இதனை அனைவருக்கும் தெளிவாக புரிய வைப்பதற்காகவே இவர் தனது வீட்டை சுற்றி 15 அடி சுவர் ஒன்றை எழுப்பி, எந்த ஒரு பெண்ணும் தன் வீட்டிற்குள் வராமல் பார்த்து கொண்டுள்ளார். “என்னை நானே ஒரு அறைக்குள் பூட்டி வைத்துக் கொள்வது மற்றும் என் வீட்டை சுற்றி பெரிய சுவர் எழுப்பி உள்ளது ஆகிய அனைத்தையும் பெண்கள் என்னை நெருங்காமல் இருப்பதற்காகவே செய்தேன்.” என்று நேர்காணல் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

இந்த நபர் ‘கைனோபோபியா’ (Gynophobia) என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். பெண்களைப் பார்த்தாலோ அல்லது அவர்களைப் பற்றி யோசித்தாலோ பயம் ஏற்படுவது கைனோபோபியா என்று மருத்துவ ரீதியாக அழைக்கப்படுகிறது. பெண்களை பார்க்கும் பொழுது பயம் மற்றும் பதற்றம் ஏற்படுவது மட்டுமல்லாமல் அவர்களைப் பற்றி யோசித்தால்கூட பயம் ஏற்படுவது இந்த கைனோபோபியாவின் சில அறிகுறிகள் ஆகும். இதனால் நெஞ்சில் ஒருவித இறுக்கம், அதிகமாக வியர்த்தல், இதய படபடப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவர் பெண்களைக் கண்டு பயந்தாலும் அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரின் தினசரி வாழ்க்கைக்கு உதவி வருகின்றனர். “சிறுவயதிலிருந்தே அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததில்லை என்றும், அவரின் முகத்தை கூட இன்னும் சரியாக தான் பார்த்ததில்லை” என்றும் அவர் வீட்டின் அருகில் உள்ள பெண் ஒருவர் கூறுகிறார். யாரேனும் அவருக்கு உதவி செய்ய நினைத்தால் கூட அவர் அருகில் நின்று பேசுவதற்கு கூட விரும்புவதில்லையாம். எனவே, அவருக்கு தேவையான பொருட்களை வெளியில் இருந்து வீச வேண்டிய சூழ்நிலைக்கு அக்கம் பக்கத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். அந்த பெண்கள் சென்ற பின்னர் இவர் அந்த பொருட்களை எடுத்துக் கொள்வாராம்.

கைனோஃபோபியா என்றால் என்ன?

இது ஒரு அரிய வகை பயமாகும். இந்த பயத்தின் காரணத்தினால், பெண்களின் மீது தீவிரமான பயம் ஏற்படும்.

இந்த நோய் குறித்த சரியான விளக்கம் யாருக்கும் தெரியவில்லை என்றாலும் இது பெண்களின் மோசமான நடத்தைகள், சுற்றுச்சூழல் காரணிகள், மரபியல் அல்லது மூளை செயல்படும் விதத்தில் மாற்றம் போன்ற காரணங்களினால் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x