மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பாலமுனை கடற்கரையில் சடலம் ஒன்று இன்று (18) கரை ஒதுங்கி உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த சடலம் 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடைய சடலம் எனவும் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தளத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஜநாயக்கா தலைமையிலான பொலிஸார் குறித்த சடலத்தை பார்வையிட்டதுடன் ஆரம்பகட்ட விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
குறித்த சடலம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாகவும் ,சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் விசாரணைகள் இடம் பெற்றுவருதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்