ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த மாதம் 25ஆம் திகதி ஆயிரங்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று (17) மண்டல அபிஷேகத்துடன் மாம்பழத்திருவிழா மேளதாள வாத்தியங்கள் முழங்க மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கணபதி வழிபாடு, வசந்த மண்டப பூஜை, புஸ்பாஞ்சலி, ஆசிர்வாத பூஜை, அலங்கார அபிசேக பூஜைகள் ஆகியன இடம்பெற்று சுவாமி உள்வீதிவலம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து மேள தாள வாத்திய இசைகள் இசைக்கப்பட்டு மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்வும் இடம்பெற்றன.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சந்திரானந்த சர்மா தலைமையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் பல சிவாச்சாரியார்கள் உட்பட குருமார்கள் பெரும் எண்ணிக்கையிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நேற்றைய நாளுக்கான உபயத்தினை தொழிலதிபர் ஆர்.கிருஸ்ணமுர்த்தி வழங்கியிருந்தார். அதனைத்தொடர்ந்து அன்னதானத்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா