Monday, May 20, 2024
Home » அமெரிக்க இல்லினாய்ஸ் பல்கலைக்கு அமைச்சர் சுசில் கண்காணிப்பு விஜயம்

அமெரிக்க இல்லினாய்ஸ் பல்கலைக்கு அமைச்சர் சுசில் கண்காணிப்பு விஜயம்

பேராதனை பல்கலையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

by mahesh
April 17, 2024 9:15 am 0 comment

அமெரிக்காவின் சிக்காகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்துக்கு (University of Illinois) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.உலகின் இரண்டாவது பாரிய மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மற்றும் ரோபோடிக் அறுவை (Robotic Surgery) சிகிச்சை ஆய்வகங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். பழமையான கல்லூரியின் மருந்தகம் மற்றும் நவீன பரிசோதனை கூடங்கள் குறித்தும் கவனம் செலுத்திய அமைச்சர், இந்தப் பல்கலைக்கழகம் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்ப முறைகளை இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார். கல்வித் துறைகளில் கூட்டுறவு பரிமாற்றத் திட்டத்தை ஏற்படுத்த பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்துக்கும் (University of Illinois) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார். இதனூடாக இலங்கை மாணவர்களுக்கு புதிய கற்றலுக்கான வாய்ப்பு கிடைக்குமென்றும் அவர் தெரிவித்தார். இக்கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் பேராசிரியர் சிவ சிவநாதனும் இணைந்து கொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT