கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் எம்.ஏ.நபீல் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவருக்கான நியமனக் கடிதத்தை திருகோணமலையில் அண்மையில் வழங்கி வைத்தார்.
கொழும்பு சுதேச மருத்துவபீடத்தில் மருத்துவக் கல்வியை நிறைவுசெய்து, யுனானி வைத்தியராக 2001ஆம் ஆண்டு பட்டம்பெற்ற இவர், களனி பல்கலைக்கழகத்தில் சுதேச வைத்தியத்துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் வைத்தியராக நியமனம் பெற்று கிழக்கு மாகாணத்தில் வேரான்கட்டுக்கொட,சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர் போன்ற ஆயுள்வேத வைத்தியசாலைகளில் வைத்திய பொறுப்பதிகாரியாகவும், வைத்திய அத்தியட்சகராகவும் பணிபுரிந்துள்ளதுடன் கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளராகவும் (Focal Point) பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)