Tuesday, June 18, 2024
Home » அமெரிக்க நாஸாவில் பணிபுரிந்த இளம் விஞ்ஞானி மஹ்ரூப் காலமானார்

அமெரிக்க நாஸாவில் பணிபுரிந்த இளம் விஞ்ஞானி மஹ்ரூப் காலமானார்

ஜனாஸா புத்தளத்தில் நேற்று நல்லடக்கம்

by mahesh
April 17, 2024 12:20 pm 0 comment

புத்தளம் நகரை சேர்ந்தவரும், அமெரிக்கா நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கடமை புரிந்து வந்தவருமான இளம் விஞ்ஞானி மஹ்ரூப் ரொஸ்மின் (38 வயது) நேற்று செவ்வாய்க்கிழமை புத்தளத்தில் வபாத்தானார்.

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான இவர், வானியற்பியல் துறையில் தேர்ச்சி பெற்றவர் என்பதுடன் அமெரிக்கா நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கடமை புரிந்தும் வந்தவர்.

திடீர் சுகயீனமடைந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த இவரின் ஜனாஸா, நேற்று மாலை 04 மணிக்கு புத்தளம் பகாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெருந்திரளானோர் இவரது ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.

புத்தளம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT