Tuesday, May 28, 2024
Home » BAIC உடன் கூட்டாண்மையை ஏற்படுத்தும் டேவிட் பீரிஸ் ஓட்டொமொபைல்ஸ்

BAIC உடன் கூட்டாண்மையை ஏற்படுத்தும் டேவிட் பீரிஸ் ஓட்டொமொபைல்ஸ்

by mahesh
April 17, 2024 10:30 am 0 comment

டேவிட் பீரிஸ் குழுமத்தின் உறுப்பு நிறுவனமான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (பிரைவட்) லிமிடட் நிறுவனம், பீஜிங் ஓட்டோமோட்டிவ் இன்டஸ்ரி ஹோல்டிங் கம்பனி லிமிடட் (BAIC) நிறுவனத்துடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியிருப்பதை பெருமையுடன் அறிவிக்கின்றது.

இந்த மூலோபாயக் கூட்டாண்மையானது வாகனத்துறையின் இரண்டு தூண்களை ஒன்றாக இணைத்திருப்பதுடன், புதிய தசாப்தத்துக்கான புத்தாக்கம், தரமான தயாரிப்பு மற்றும் இலங்கை வாகன ஓட்டிகளுக்கு ஈடு இணையற்ற வாடிக்கையாளர் சேவைகளை உறுதியளித்துள்ளது.

BAIC என்பது னாவில் உள்ள 6ஆவது பாரிய வாகனக் கம்பனியாகும். இது 1958ஆம் ஆண்டு பீஜிங் ஓட்டோமோட்டிவ் மனுபக்ஷரிங் பக்டறி BAIC என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. ஜிங்காங்ஷன் செடான், BJ212 மற்றும் BJ 130 போன்ற சின்னச் சின்ன வாகனங்களின் ஊடாக வளர்ச்சி பெற்ற பெருமையான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம் சீனாவின் முன்னணி மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வாகனக் கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

இதன் தாய் நிறுவனமான பீஜிங் ஓட்டோமோட்டிவ் குரூப் கம்பனி லிமிடட் 162வது இடத்தைப் பிடித்திருப்பதுடன், இதன் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் சந்தையில் அதற்கான இடம் என்பன இதன் மூலம் புலப்படுகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT