Saturday, June 22, 2024
Home » முட்டை விலை அதிகரிப்பால் கேக் உற்பத்தியில் வீழ்ச்சி

முட்டை விலை அதிகரிப்பால் கேக் உற்பத்தியில் வீழ்ச்சி

பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

by mahesh
April 17, 2024 8:30 am 0 comment

நாட்டில் நிலவிய முட்டை விலை அதிகரிப்பால் பண்டிகைக் காலங்களில் கேக் உற்பத்தியை வெகுவாகக் குறைக்க நேர்ந்ததாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று மேற்படி சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அச்சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது முட்டையொன்றின் விலை 55 ரூபாவாக காணப்படுகிறது. இந்நிலையில் பண்டிகைக் காலத்தில் வழமை போன்று கேக் உற்பத்தியை மேற்கொள்ள முடியாமற் போனது. அந்த வகையில் 25 வீதமான கேக் உற்பத்தி மாத்திரமே பண்டிகைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT