Saturday, November 2, 2024
Home » திருச்சி முகாமிலுள்ள இலங்கை பெண்ணுக்கு இந்திய வாக்குரிமை

திருச்சி முகாமிலுள்ள இலங்கை பெண்ணுக்கு இந்திய வாக்குரிமை

by mahesh
April 17, 2024 7:20 am 0 comment

தமிழகத்தின் திருச்சி முகாமிலுள்ள இலங்கை அகதி பெண் ஒருவருக்கு இந்திய வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. அகதியாகத் தஞ்சமடைந்த இலங்கையர் ஒருவருக்கு இந்திய வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

இலங்கையிலிருந்து அகதிகளாக தஞ்சம் புகுந்த இலங்கையருக்கு குடியுரிமை மற்றும் வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள நளினி கிருபாகரன் என்ற 38 வயது இலங்கை பெண்ணுக்கு, நடைபெறவுள்ள இந்திய பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின்னரே இந்த உரிமை அவருக்கு கிடைத்துள்ளது.

இவர் கடந்த 1986 இல், இராமேஸ்வரத்தில் மண்டபம் முகாமில் பிறந்தார். பின்னர் திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார்.

இந்த வாக்குரிமைக்கான அவரது பயணம் 2021 இல் தொடங்கியது. முதலில் இந்திய கடவுச் சீட்டுக்காக அவர் விண்ணப்பித்த போது பிராந்திய கடவுச் சீட்டு அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தை அவர் நாடினார்.

2022 ஆகஸ்ட் 12இல், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், நளினியின் மண்டபத்திலிருந்து பிறந்த சான்றிதழைக் காட்டி, அவருக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

1950 ஜனவரி 26 மற்றும் ஜூலை 1, 1987 க்கு இடையில் இந்தியாவில் பிறந்த ஒருவர் குடியுரிமைச் சட்டம், 1995 இன் பிரிவு 03 சட்டத்தின் படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x