625
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா உற்சவம் நேற்று (14) மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பஞ்சமுக விநாயக பெருமான் ரதத்தில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
தேர்த்திருவிழாவில் பெருமளவிலான விநாயக அடியவர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானின் அருள் கடாட்சத்தினை பெற்றுக்கொண்டனர்.
கடந்த முதலாம் திகதி கொடியேறத்துடன் ஆரம்பமான வருடார்ந்த மகோற்சவ பெருவிழா இன்று (15) மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளது.
அடியவர்கள் அங்கபிரதட்டை, கற்பூரசட்டி எடுத்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
யாழ்.விசேட நிருபர்