Saturday, May 25, 2024
Home » கிழக்கு, ஊவா, தென் பகுதிகளில் மழை தற்காலிக அதிகரிப்பு

கிழக்கு, ஊவா, தென் பகுதிகளில் மழை தற்காலிக அதிகரிப்பு

- மட்டு, அம்பாறையில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

by Rizwan Segu Mohideen
April 15, 2024 8:28 am 0 comment

– அவ்வப்போது இடியுடன் மழைக்கு வாய்ப்பு
– பல இடங்களில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (15) நாட்டின் கிழக்கு, ஊவா, தென் மாகாணங்களில் மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வட மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT