Sunday, May 26, 2024
Home » IPL 2024 RR vs PBKS: 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் வெற்றி

IPL 2024 RR vs PBKS: 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் வெற்றி

by Prashahini
April 14, 2024 2:53 pm 0 comment

IPL T20 கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய (13) போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ய, ஓப்பனர்களாக ஜானி பேர்ஸ்டோ – அதர்வ தைடே களமிறங்கினர்.

27 ஓட்டங்களை சேர்த்த இந்த பாட்னர்ஷிப்பை 4வது ஓவரில் அவேஷ் கான் பிரித்தார். அதர்வ தைடே 15 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 10 ஓட்டங்களில் கிளம்பினார். ஜானி பேர்ஸ்டோ 15 ஓட்டங்களுக்கு விக்கெட்டாக, சாம் கரன் 6 ஓட்டங்களில் அவுட்டானார்.

ஷசாங்க் சிங் 9 ஓட்டங்கள், ஜிதேஷ் சர்மா 29 ஓட்டங்கள் என நிலைக்காமல் கிளம்ப அஷுதோஷ் சர்மா மட்டும் அணியில் அதிகபட்ச ஸ்கோராக 31 ஓட்டங்களை சேர்த்தார். அவரின் 3 சிக்சர்கள் பெரும் நம்பிக்கையூட்டியது. இறுதியில் அவரும் விக்கெட்டாக 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 147 ஓட்டங்களை சேர்த்தது.

148 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – தனுஷ் கோட்டியன் இருவரும் ஓபனிங் ஆடினர். இதில் ஜெய்ஸ்வால் 39 ஓட்டங்கள், தனுஷ் 24 என இந்த ஜோடி நிதானமாக தொடங்கியது.

அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் 18 ஓட்டங்கள், ரியான் பராக் 23 ஓட்டங்கள் துருவ் ஜுரேல் ஆறு ஓட்டங்கள் என ஒவ்வொருவராக வெளியேற, ஷிம்ரோன் ஹெட்மயர் மூன்று சிக்ஸர்களுடன் 27 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகாமல் ராஜஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டார்.

19.5 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT