759
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.
Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் இதனை சுட்டிக்காட்டுவதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கை ரூபா இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% இற்கும் அதிகமான வளர்ச்சியை, இந்த முதல் காலாண்டில் அடைந்துள்ளதாக, ப்ளூம்பேர்க் வளர்ந்து வரும் சந்தைகள் (Bloomberg Emerging Markets) தரவு குறிகாட்டிகளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.