359
மலர்ந்திருக்கும் குரோதி தமிழ் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று (14) காலை இடம்பெற்றன.
குரோதி புதிய வருடப்பிறப்பினை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் புதுவருட சிறப்பு வழிபாட்டு பூஜைகள் இடம்பெற்றன.
இவ்வுற்சவத்தினை ஆலய பிரதம குரு வ. வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரிகள் நடாத்தி வைத்தனர்.
வசந்த மண்டபத்தில் அலங்கார கந்தன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட கிரியைகள் இடம்பெற்று, முருகப்பெருமான் மயில் வாகனத்தில் வீற்றிருந்து எழுந்தருளியாக வீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பு. கஜிந்தன்