225
Muscle Max Fitness Kingdom மற்றும் Iron Arms ஆகியவற்றின் அனுசரணையுடன் MUSCLE MAX SRI LANKA உடற்கட்டழகு இறுதிப் போட்டி எதிர்வரும் மே 26 ஆம் திகதி களனி, கோணவல க்ளாவர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை உடற்கட்டழகு சம்மேளனத்தின் ஆதரவுடன், களனி உடற்கட்டழகு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டி பல கட்ட ஆரம்ப சுற்றுகளை அடுத்தே இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. மாபெரும் இறுதிப்பட்டமான MR. MUSCLE MAX என்பது அகில இலங்கை மட்டத்தில் பகிரங்க போட்டியின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.