சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லவுள்ள பயணிகளின் நன்மை கருதி விசேட ரயில், பஸ் போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுமார் 13 இலட்சம் பயணிகள் தமது சொந்த இடங்களுக்கு செல்லும் நிலையில் மேலதிக ரயில் சேவைகள் இடம்பெறுவதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
05 பிரதான பிரிவுகளின் கீழ் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இதற்கமைய வழமையான போக்குவரத்துச் சேவைகளை விட மேலதிகமாக 700 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை பயணிகளின் பாதுகாப்புக் கருதி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.