Tuesday, June 18, 2024
Home » வட்டவளை தோட்டக்குடியிருப்பில் தீ விபத்து

வட்டவளை தோட்டக்குடியிருப்பில் தீ விபத்து

by Gayan Abeykoon
April 11, 2024 8:04 am 0 comment

வட்டவளை மீனாட்சி தோட்ட முதலாம் தொடர் குடியிருப்பில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் பொதுமக்களின் முயற்சியினால் தடுக்கப்பட்டுள்ளது.

தொடர் குடியிருப்பில் வீடொன்றின் மீது நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் எரிவாயு கசிவு  காரணமாக ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தோட்ட குடியிருப்பில் வழமையாக தமது பணிகளை முன்னெடுத்திருந்த சந்தர்ப்பத்தில் வீடொன்றில் திடீரென தீ பற்ற ஆரம்பித்தமையால் சம்பவ இடத்திற்கு வந்த பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தோட்ட குடியிருப்பில் 6  லயன்கள் காணப்பட்டதோடு அதில் ஒரு வீட்டில் இச் சம்பவம் பதிவாகியிருந்தது.

கினிகத்தேனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT