Monday, July 22, 2024
Home » கைத்தொழில் தொழில் முனைவோர் மாணவர்களுக்கு பதக்கங்கள்
நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில்

கைத்தொழில் தொழில் முனைவோர் மாணவர்களுக்கு பதக்கங்கள்

by Gayan Abeykoon
April 11, 2024 7:45 am 0 comment

கைத்தொழில் அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் நடத்தப்பட்ட ‘பாடசாலை கைத்தொழில் தொழில்முனைவோர் வட்டம்’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை தொழில் முனைவோருக்கு பதக்கங்களை வழங்கும் நிகழ்வு அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் தாமரைத் தடாக அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொழில்முனைவோர் பதக்கத்தை மாணவ மாணவியருக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரண வழங்கினார். அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.எஸ்.சமரகோன், இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் ரேணுகா ஜயலத் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT